search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் வலைவீச்சு"

    • டாஸ்மாக் கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
    • ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் கடை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர்.

    பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    கல்லாப் பெட்டியில் இருந்த பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பதறியடித்து கொண்டு சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ஊழியர்கள் திருவையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    எவ்வளவு பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போனது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அதன் பிறகே கொள்ளை போனவற்றின் மதிப்பு முழு அளவில் தெரிய வரும் .இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தை சேர்ந்த 24 வயதுள்ள இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அந்த கம்பெனிக்கு அருகில் உள்ள டீக்கடையில் கேரள மாநிலம் மலப்புழா மாவட்டம் ஒலப்பிடுக்கா கிராமத்தைச் சேர்ந்த முகமது அஸ்வாக் (வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவர் களுக்குள் காதல் ஏற்பட்டு இரவு நேரத்தில் டீக்கடை யில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.பின்பு கடந்த மே மாதம் 26-ந் தேதி பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் உள்ள இளம்பெண்ணின் சித்தப்பா வீடான குடி யிருப்புக்கு வந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ள னர்.தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்ப தாக முகமது அஸ்வாக் மீது இளம்பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து முகமது அஸ்வாக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

     சேலம்:

    சேலம் இரும்பாலை எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

    போலீசில் புகார்

    உடனே அந்த பெண் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த வாலிபர் வெளியே வந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அந்த பெண் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை சில்மிஷம் செய்தவர் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    வழக்குப்பதிவு

    இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.

    இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.

    இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார்.
    • தனக்கு சொந்தமான மின் மோட்டார் இரும்பு கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்,

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை அடுத்து எச்.புதுப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் மதியழகன் (வயது 60). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணற்றில் மின்மோட்டார் ஒன்றை வைத்து இருந்தார். அந்தமின் மோட்டார் பழுதடைந்ததால் அவற்றை கழட்டி எடுத்து அருகில் உள்ள தனது கிழங்கு அரவை மில்லில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று திடீரென அந்த மில்லில் வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் காணாமல் போயிருந்தது, இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மதியழகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தார். மின்மோட்டார் கிடைக்கவில்லை. மோட்டார் திருடு போயிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் ஏ,பள்ளிப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வெங்கடேசன் (48) என்பவர் கடையில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது தனக்கு சொந்தமான மின் மோட்டார் கடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திருடு போன மின்மோட்டார் மதியழகனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

    • மீண்டும் சில முறை சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அந்த சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். தொழிலாளர்களான இவருடைய பெற்றோர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி அரூர் அருகே உள்ள கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (22) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி தனியாக இருந்தபோது அவரை சந்தித்த வினோத் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும் சில முறை சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தின் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் சிறுமியை பவானி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று குழந்தை திருமணம் செய்துள்ளார்.

    பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அந்த சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது.

    இது குறித்து செவிலியர்கள் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் போலீசார் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வாலிபர் வினோத் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
    • யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.

    அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    • பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சா கார்த்திக். அஸ்தம்பட்டி அருகே, ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி. பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கீர்த்தி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு, தாதகாப்பட்டி கேட், ஆஞ்சநேயர் கோவில் அருகே வைத்து பிச்சா கார்த்தியை தாக்கினார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க ஜீவானந்தம் என்பவர் வந்தபோது, போலீசார் வாகன சோதனையில் அவர் பிடிபட்டார்.

    விசாரணையில், ராமு என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கீர்த்தி, பரத், மணி, கவியரசு ஆகியோர் மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

    இதில் ஜீவானந்தத்தை தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
    • போலீசார் கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பிளியனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 100 குடும்பங்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் மாரியம்மன் கோவில் முன்பு இருந்த முன் பக்க கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர்.

    பின்னர் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மறு நாள் காலை கோவி லில் அருகில் இருந்த பொதுமக்கள் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இக்கோவிலில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், நகை திருடு போனது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத் இருந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலெக்டர் வினீத் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில் எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    போலி வாட்ஸ் அப் கணக்கு

    இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து கலெக்டர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசில் புகார்

    இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கலெக்டராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- போலி யாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசா ரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனது பெயரில் இருந்தோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    ×